Home செய்திகள் உலக செய்திகள் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

டெஹ்ரான்: ஏப்ரல் 10-
ஈ​ரானும், அமெரிக்கா​வும் போர் நிறுத்​தத்தை அறி​வித்​த​பின், லெபனான் மீது இஸ்​ரேல் நேற்று முன்தினம் 100 ஏவு​கணை​களை ஏவி 254 பேரை கொன்​றது. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியுள்​ளது. இதனால் சண்டை நிறுத்​தத்​தில் குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது.
போர் காரண​மாக மூடப்​பட்ட ஹார்​முஸ் ஜலசந்​தியை சர்வ​தேச கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்​கள் கிழமை முடிவடைந்​தது. ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதலை அமெரிக்கா தொடங்க இருந்த நிலை​யில் கடைசி நேரத்தில் 2 வார கால சண்டை நிறுத்த உடன்​பாடு ஏற்பட்டது. ஹார்​முஸ் ஜலசந்​தியை திறக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது. இரு நாடு​கள் இடையே அமைதி பேச்​சு​வார்த்தையை ஏற்​படுத்​தும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் இறங்​கியது.
இந்​நிலை​யில் இஸ்​ரேல் தனது தாக்​குதலை லெப​னான் நோக்கி திருப்​பியது. பெய்​ரூட் நகரில் ஹிஸ்​புல்லா தீவிரவா​தி​களை குறி​வைத்து நேற்று முன்​தினம் 100 ஏவுகணை​களை வீசி​யது. இதில் 254 பேர் உயி​ரிழந்​தனர். 890 பேர் காயம் அடைந்​தனர். லெப​னான் மீது கடும் தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தால், இஸ்​ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்​தி​யது.
இதைத் தொடர்ந்து ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டது. இதனால் வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியதாக கூறப்​படு​கிறது. இதனால் சண்டை நிறுத்​தம் குறித்து குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது. ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்​தத்​துக்​கும், லெப​னான் மீதான தாக்​குதலுக்​கும் சம்​பந்​தம் இல்​லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்​பந்​த​மாக இருந்​தா​லும், அதில் லெபனானும் சேர்க்​கப்பட வேண்​டும் என ஈரான் வலியுறுத்தி​யது. இதனால் போரை தொடர்​வ​தா, அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு செல்​வதா அல்​லது இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகுவை கட்​டுப்​படுத்​து​வதா என்ற குழப்​பத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்​ளார். இஈரான் – அமெரிக்கா இடையே இஸ்​லாமா​பாத்​தில் இன்று அமைதி பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு நேற்று பாகிஸ்​தான் வந்​தது. இதே​போல் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தனது குழு​வினருடன் பாகிஸ்​தான் வந்து இன்று பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​ப​தாக தகவல் வெளியாகியுள்​ளது.