
தெஹ்ரான்: ஏப்ரல் 20
ஈரானிய சரக்குக் கப்பலான ‘டூஸ்கா’-வை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, ஓமன் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஈரான்-அமெரிக்கா இடையே ஏப்.22 வரை தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில், ஈரானின் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்தியிருந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனஎன்ன நடந்தது? ஈரானின் ‘டூஸ்கா’ என்ற சரக்குக் கப்பல், ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றது. அப்போது இந்த கப்பலின் என்ஜின் ரூம் மீது அமெரிக்க கப்பல் தாக்குதல் நடத்தியது. இதனால், கப்பலின் என்ஜின் தற்காலிகமாக செயலிழந்தது. இதனையடுத்து இந்த கப்பலை அமெரிக்கா சிறைபிடித்திருக்கிறது. சீன தொடர்பு சிறைபிடிக்கப்பட்ட ‘டூஸ்கா’ கப்பல், சீனாவிலிருந்து ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இதில் சீனத் தொடர்பு இருப்பதால், இந்த விவகாரம் இப்போது அமெரிக்கா – ஈரான் மோதலில் இருந்து மாறியுள்ளது.மறுபுறம், ஈரான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ட்ரோன் மூலம் பதில் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா ராணுவ தளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தகவலை ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.



















