Home செய்திகள் தேசிய செய்திகள் பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு

பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு

புதுடெல்லி: மார்ச் 7-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்​சத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயி​ரிழந்தார்.அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்த வந்​த​போது பதுங்கு குழிகள் மீது இஸ்​ரேல் வான்​படைகள் நடத்​திய அதிரடி ஏவு​கணை தாக்​குதலில் அவர் உட்பட பலர் உயி​ரிழந்​தனர்.இதுதொடர்​பான வீடியோவை இஸ்​ரேல் பாது​காப்​புப் படைகள் (ஐடிஎஃப்) வெளி​யிட்​டுள்​ளன. இந்த வீடியோ தற்​போது வைரலாகி​யுள்​ளது. அலி காமேனி தனது வீட்​டின் கீழ்ப்​பகு​தி​யில் அமைக்​கப்​பட்டு இருந்த பதுங்கு குழிகள் மீது 50 இஸ்​ரேல் போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்​தின.
பதுங்கு குழிகளை தகர்க்​கும் அளவுக்கு மிக​வும் அதிரடி​யான ஆயுதங்​கள் கொண்டு இஸ்​ரேல் விமானப்​படை​யின​ரால் தாக்​கப்​பட்​டது.இந்த பதுங்கு குழிகளில் இருந்​த​படி​தான் அவர் போர் தொடர்​பான உத்​தர​வு​களை பிறப்​பித்து வந்​தார்.
50 விமானங்​கள் ஒரே நேரத்​தில் தாக்​குதல் நடத்​தி​ய​போது அப்​பகுதி இருந்த கட்​டிடங்​கள் முழு​வதும் வெடித்​துச் சிதறின. இதனால் அங்கு எழும்​பும் புகை மண்​டல​மும் வீடியோ​வில் பதி​வாகி​யுள்​ளது.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள், ஈரான் இடையே​யான போர் 7-வது நாளை எட்​டிய நிலை​யில் நேற்று இந்த வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ளது.
இந்த வீடியோ உலகம்​ முழு​வதும்​ வைரலாகி​யுள்​ளது.