Home மாவட்டங்கள் பெங்களூர் பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்

பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்

சென்னை: மார்ச் 17 –
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே வேட்பாளர் நேர்காணல் முடிந்துவிட்டது. தவெகவில் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் தவெக தரப்பில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழல் நிலவுகிறது. தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார். சுமார் 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் செய்தார். அப்போது, எல்லாவற்றையும் வந்துவிட்டேன். இனி எனக்கு எல்லாமே அரசியல் தான் என்று விஜய் உருக்கமாக பேசியதாக தகவல் வெளியானது. புதுச்சேரி வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் நேர்காண ல் செய்தனர். அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் இன்று நடைபெறுகிறது.
தவெக வேட்பாளர் தேர்வு செய்யும் பொறுப்பு புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் தொடங்கும் இரண்டாம் கட்ட நேர்காணலில் சுமார் 50 நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விஜய் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் தவெகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.