Home விளையாட்டு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் புன்னகையை ரசித்த தோனி

பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் புன்னகையை ரசித்த தோனி

அகம​தா​பாத், மார்ச் 10- இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஜாம்பவானான எம்​.எஸ்​.தோனி அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறு​திப் போட்​டியை ஐசிசி சேர்​மன் ஜெய் ஷா, முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா ஆகியோ​ருடன் விஐபி மாடத்​திலிருந்து ண்டு​களித்​தார். போட்டி முடிந்து இந்​திய அணி கோப்​பையை வென்ற சில நிமிடங்​களி​லேயே, தோனி ஒரு மகிழ்ச்​சி​யான பதிவை வெளி​யிட்​டார். அதில், “அகம​தா​பாத்​தில் வரலாறு படைக்​கப்​பட்​டுள்​ளது. உலகெங்​கிலும் உள்ள இந்​திய கிரிக்​கெட் ரசிகர்​களுக்​கும், அணி வீரர்​களுக்​கும், பயிற்​சி​யாளர்​களுக்​கும் எனது வாழ்த்​துகள். நீங்​கள் அனை​வரும் விளை​யாடு​வதைப் பார்ப்​பது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருந்​தது” என தெரி​வித்​துள்​ளார். மேலும் தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரைக் குறிப்​பிட்​டு, “பயிற்​சி​யாளர் சார், உங்​கள் முகத்​தில் புன்​னகை அற்​புத​மாக இருக்​கிறது. தீவிர​மான முக​பாவனை​யுடன் கூடிய இந்த புன்​னகை ஒரு கில்​லர் காம்போ போன்று இருக்​கிறது. புன்​னகைக்க என்ன ஒரு அற்​புத​மான காரணம்.
உங்​களை இப்​படி பார்த்​த​தில் மிக்க மகிழ்ச்​சி. மிகச் சிறப்​பான செயல்​பாடு. வெற்​றியை மகிழ்ச்​சி​யாக கொண்​டாடுங்​கள். பும்ரா பற்றி நான் எதை​யும் எழு​தாமல் இருப்​பதே நல்​லது. அவர், ஒரு சாம்​பியன் பந்து வீச்​சாளர்” என தெரி​வித்​துள்​ளார். தோனி​யின் கேப்​டன்​ஷிப்​பில் இந்​திய அணி வாகை சூடிய 2007-ம் ஆண்டு நடை​பெற்ற டி20 உலகக் கோப்பை மற்​றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கவுதம் கம்​பீர் முக்​கிய பங்கு வகித்​திருந்​தார். வீர​ராக​வும் சரி, பயிற்​சி​யாளராகம் சரி கவுதம் கம்​பீர் எப்​போதும் சிரித்த முகத்துடன் இருந்​தது இல்​லை. இதை குறிப்​பிட்டே தோனி இந்த பதிவை வெளி​யிட்டு இருந்​தார். கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு இன்​ஸ்​டாகி​ராமில் தோனி ஒரு பதிவு போட்டு இருந்​தார். இதன் பின்​னர் 2 வருடங்​களாக சமூக வலைத்​தளங்​களில் அமை​தி​யாக இருந்த அவர், நேற்று முன்தினம் பதிவை வெளி​யிட்ட உடன் அதை ரசிகர்​கள்​ அதி​க அளவில்​ பகிர்ந்​தனர்​.