Home மாவட்டங்கள் பெங்களூர் பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

சென்னை: மார்ச் 28:
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்​றச்​சாட்​டில் அண்ணா பல்​கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை அண்ணா பல்​கலைக் கழகத்​தில் 3-ம் ஆண்டு படிக்​கும் மாணவி ஒரு​வர், காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று முன்​தினம் நேரடி​யாகச் சென்று புகார் ஒன்றை அளித்​தார்.
அதில் கூறி​யிருப்​ப​தாவது: பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்கி படித்து வரு​கிறேன். ‘எனது குடும்​பம் ஏழ்​மை​யானது. எனக்கு சென்னை கிண்​டி​யில் உள்ள அண்ணா பல்​கலைக் கழகத்​தில் பேராசிரிய​ராக பணி செய்து வரும் செங்​கல்​பட்​டைச் சேர்ந்த ஞானவேல் பாபு​வின் (50) அறி​முகம் ஒரு​வர் மூலம் கிடைத்தது.
படித்து பெரிய ஆளாக வேண்​டும் என்ற ஆசை மற்​றும் கனவு இருந்​தது. ஆனால், போதிய வழி​காட்​டல் இல்​லை. இதை அறிந்த பேராசிரியர் ஞானவேல் பாபு எனக்கு உதவுவ​தாக நம்​பிக்கை அளித்​தார். பின்​னர், அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்து படிக்க உதவி செய்​தார்.கல்வி உதவித்தொகை பெற உதவினார். இதனால், அவர் மீது எனக்கு நன்மதிப்பு ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், நாட்​கள் செல்லச் செல்ல அவரது அணுகு​முறை மற்​றும் செயல்​பாட்​டில் மாற்​றம் ஏற்​பட்​டது.
எனது செல்​போன் எண்​ணுக்கு அடிக்​கடி தொடர்பு கொண்​டார். இரட்டை அர்த்​தத்​தில் ஆபாச​மாக பேசத் தொடங்​கி​னார். மேலும், ஆபாச​மான வீடி யோக்​கள் மற்​றும் குறுஞ்​செய்​தி​களை​யும் தொடர்ந்து அனுப்​பி​னார்.
இதையடுத்​து, நான் படிப்​படி​யாக வில​கினேன். நான் கண்​டித்​தும் கேட்​காமல் 3 ஆண்​டாக தொடர் அத்​து​மீறலில் ஈடு​பட்டு வரு​கிறார். அவர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
இவ்​வாறு அந்​தப் புகாரில் மாணவி தெரி​வித்​திருந்​த​தாக போலீ​ஸார் கூறினர்.