Home மாவட்டங்கள் பெங்களூர் புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

சென்னை: ஏப்ரல் 1-
புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை தொழில் நிறு​வனங்​கள் இன்று முதல் அமல்​படுத்​து​வ​தால் தொழிலா​ளர்​களுக்​கான பண பயன்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.
இந்​தி​யா​வில் ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த பல்​வேறு தொழிலா​ளர் சட்​டங்​கள், நாடு சுதந்​திரம் பெறு​வதற்கு முன்​ன​தாகவோ அல்​லது சுதந்​திரம் அடைந்த பின்​னர் அதாவது, 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை இயற்​றப்​பட்​ட​வை​யாக இருந்​தன. அப்​போது இருந்த நாட்​டின் பொருளா​தார சூழல் மற்​றும் உலக அளவி​லான தொழிலா​ளர்​கள் நிலை இப்​போது மாறி​யுள்​ளன.
4 புதிய சட்டங்கள்: நாட்​டில் நடை​முறை​யில் இருந்த 29 மத்​திய தொழிலா​ளர் சட்​டங்​கள் சிக்​கல் நிறைந்​த​தாக​வும், பல்​வேறு சட்​டங்​களாக​வும் சிதறுண்டு தற்​போதைய காலத்​துக்கு பொருந்​தாத வகை​யில் இருந்​தன. அதனால் அச்​சட்​டங்​களை எளிமைப்​படுத்த மத்​திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்​தது.
அதன்​படி, 29 சட்​டங்​களுக்கு மாற்​றாக, தொழிலா​ளர் ஊதி​யச் சட்ட விதி 2019, தொழில் துறைத் தொடர்​பு​கள் சட்ட விதி 2020, சமூகப் பாது​காப்​புச் சட்ட விதி 2020, தொழில்​முறைப் பாது​காப்​பு, சுகா​தா​ரம் மற்​றும் பணி​யிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய 4 சட்​டங்​கள் 5 ஆண்​டு​களுக்கு முன்பு நாடாளு​மன்​றத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்டு சட்​ட​மாகின. இவை கடந்த ஆண்​டு, நவ.21-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளன. இதை பெரும்​பாலான நிறு​வனங்​கள் உடனடி​யாக அமல்​படுத்​த​வில்​லை. இன்று தொடங்​கும் புதிய நிதி​யாண்​டில் இருந்து அமல்​படுத்​துகின்​றன. இந்த புதிய சட்​டத்​தில், தொழிலா​ளரின் மொத்த ஊதி​யத்​தில், அதாவது நிறு​வனத்​தின்வருங்​கால வைப்பு நிதி மற்​றும் ஓய்​வூ​திய நிதி பங்​களிப்​பு, விடுப்​புக்கு ஈடாக பணம் பெறு​தலுக்​கான பங்​களிப்பு உள்ளிட்டஅனைத்​தும் சேர்த்த மொத்த ஊதி​யத்​தில் அல்​லது மொத்தசிடிசி​யில் (CTC) 50 சதவீதத்தைஅடிப்​படை ஊதி​யமாக கணக்கிட வேண்​டும் என்ற முக்​கிய அம்​சம் இடம்​பெற்​றுள்​ளது.இவ்​வாறு நிறு​வனங்​கள் அடிப்​படை ஊதி​யத்தை நிர்​ண​யிக்​கும்​போதும், தொழிலா​ளர்​களின் வருங்​கால வைப்பு நிதி சேமிப்​பும், அதற்கு இணை​யாக நிறு​வனத்​தின் பங்​களிப்​பும் அதி​கரிக்​கும். அதன் பயனாக வருங்​கால வைப்பு நிதி ஓய்​வூ​தி​யம் அதி​க​மாக கிடைக்க வாய்ப்​புள்​ளது. மேலும் விடுப்​புக்கு ஈடாக பணமாக பெறும் தொகை​யும் அதி​க​மாகும். மேலும் ஓய்​வு​பெறும்​போது பணிக்​கொடை​யும் அதி​க​மாக கிடைக்​கும்.