Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் கோடை வெயில் கொடுமை

பெங்களூரில் கோடை வெயில் கொடுமை

பெங்களூர்: ஏப்ரல் 11-
பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
கோடைகாலம் தொடங்கி விட்டது. இதனால் நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பெங்களூருவும் விதிவிலக்கல்ல. பெங்களூரில் தற்போது தொடர்ந்து வெப்பம் அதிகரித்து செல்கிறது.
கடந்த 3 நாட்களாக படிப்படியாக வெயில் உயர்ந்து மதிய வேளையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது. இதனால் மதிய வேளையில் வீட்டில் மின்விசிறி, ஏசியை அதிகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் பெங்களூரு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: நகரில் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வெப்ப அலையால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஊடகங்கள் வழியாக வெப்பநிலை குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வெப்பத்தை தணிக்க தேவையான முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்படி தாகம் இல்லாவிட்டாலும் கூட அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மெல்லிய, தளர்வான, வெள்ளை நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது கண்ணாடிகள், தொப்பிகள், காலணிகள் அல்லது செருப்புகள் அணிந்து செல்ல வேண்டும். குடைகள் எடுத்து செல்ல வேண்டும். நீண்ட தூரம் பயணிக்கும்போது கையுடன் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். 3 மணிநேரம் வெளியே வர வேண்டாம் வெயிலில் வேலை செய்யும் நபர்கள் என்றால் தலை, கழுத்து, முகம், கை, கால்களில் ஈரத்துணியை பயன்படுத்தி அடிக்கடி துடைக்கலாம். லஸ்ஸி, சர்பத், எலுமிச்சை சாறு, மோர் பேன்ற பானங்களை பருகலாம். கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.