
பெங்களூர் ஏப்ரல் 3- நம்ம ஊரு சிலிக்கான் வேலியான பெங்களூரு இப்போ ஒரு பரபரப்பான விவாதத்தில் சிக்கியிருக்கிறது. அடுத்த 3 வருடத்தில் 80% ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என ஒரு ஐடி இன்சைடர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்னாலஜியை உருவாக்குறவங்களே அந்த டெக்னாலஜியால (AI) பாதிக்கப்பட போறாங்களா? யாரெல்லாம் IT Slaves என்று அழைக்கப்படுகிறார்கள்? இந்த AI புயல்ல இருந்து தப்பிக்க போகும் அந்த 20% அதிர்ஷ்டசாலிகள் யார்? அவங்ககிட்ட இருக்குற அந்த ஸ்பெஷல் ஸ்கில் என்ன? உங்கள் கேரியரை தக்கவைக்க நீங்க இப்போவே செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி நிபுணர் சமீபத்தில் பணிநீக்கம் காரணமாக தனது வேலையை இழந்தார். ஆனால் அவர் அதற்காக கவலைப்படவில்லை. மாறாக தான் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு இப்போது தன்னை காப்பாற்றியுள்ளதாக ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஏன் அப்படி சொல்கிறார்? அவர் தரும் எச்சரிக்கை என்ன? தெரிந்து கொள்வோமா.. பெங்களூரு நகரில் சொந்தமாக வீடு வாங்குவதற்கு முன்பு, ஐடி ஊழியர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறும் அந்த ஐடி நிபுணர், சொந்த வீடு வாங்காமல் வாடகை வீட்டிலேயே தங்குவது என்று தான் எடுத்த முடிவை, தனது வாழ்நாளில் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் ஒன்று என கூறுகிறார். அந்த நபர் ஒரு பெரிய டெக் நிறுவனத்தில் AI Migration திட்டத்தில் நேரடியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கும் அளவுக்கு அவரிடம் வசதி இருந்தது. ஆனால் அதை செய்யவில்லை. அலுவலகத்துக்கு அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் தங்கினார். கடந்த வாரம் அவர் வேலையிழந்த போது, சொந்த வீடு வாங்காத அந்த முடிவை நினைத்து நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏஐ துறையில் பணியாற்றியதன் மூலம், ஐடி துறையில் அடுத்த சில ஆண்டுகளில் நடக்கப்போகும் மாற்றங்களை அவர் முன்கூட்டியே கணித்தது தான் இதற்குக் காரணம் எனவும் கூறுகிறார்.

















