
லக்னோ, மார்ச் 12- கங்கை நதியின் பெயரால் உருவாகியுள்ள ‘கங்கா விரைவு நெடுஞ்சாலை’ இந்தியாவின் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் போக்குவரத்தில் புதிய இணைப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தொழில் வளர்ச்சி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சுற்றுலாவுக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் அதானி குழுமதத்தால் ரூ.36,000 கோடிக்கும் அதிகமான செலவில் 594 கிலோ மீட்டருக்கு கங்கா விரைவு நெடுஞ்சாலை (Ganga Express Way) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கங்கா விரைவு நெடுஞ்சாலை மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை அமைகிறது. இது இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைத்து, 12 மாவட்டங்களில் தொழில், சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும். இத்திட்டத்தில் சுமார் 80% (464 கி.மீ.) தூரத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் (AEL) துணை நிறுவனமான அதானி சாலைப் போக்குவரத்து லிமிடெட் உருவாக்குகிறது. மீதமுள்ள 130 கிலோமீட்டர் தொலைவை ஐ ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் அமைக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய Greefield மற்றும் Build-Operate-Transfer (BOT) சாலைத் திட்டங்களில் ஒன்றாகும். அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கங்கா விரைவு நெடுஞ்சாலை இந்தியாவின் ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். அதேபோல் ஏ.இ.எல். தனது போக்குவரத்து பிரிவில் சாலை வர்த்தகத்தை வளர்த்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு நெட்வொர்க்குகளால் நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் ஜி.டி.பி.யில் 14% ஆக உள்ளது. இது அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் 8-9%ஐ விட அதிகம். இந்த செலவுகளைக் குறைக்க, பொருட்கள் மற்றும் மக்களின் விரைவான இயக்கத்திற்கு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களில் அதானி குழுமம் முதலீடு செய்கிறது. அதானி துறைமுகங்கள் மூலம் இக்குழுமம் தனது திட்டத்தை நிரூபித்துள்ளது. 2007-ல் ஏ.இ.எல்.லிலிருந்து பிரிந்த இவை, தற்போது இந்தியாவின் துறைமுக சரக்குப் போக்குவரத்தில் 27%ஐ கையாள்கிறது. 12 பன்னோக்கு லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், ரயில் இணைப்புடன் ஒரு விரிவான லாஜிஸ்டிக்ஸ் வலையமைப்பை இது கொண்டுள்ளது. அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையிலும் இக்குழுமம் விரிவடைகிறது. இது இந்தியாவில் எட்டு முக்கிய விமான நிலையங்களை இயக்கி, உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தில் 25%, விமான சரக்குப் போக்குவரத்தில் 31%ஐ கையாள்கிறது. இந்த அமைப்பிற்குள், கங்கா விரைவு நெடுஞ்சாலை தொழில்துறை மையங்கள், லாஜிஸ்டிக்ஸ் மையங்கள், நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய கண்ணியாகும். கங்கா விரைவு நெடுஞ்சாலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் விரைவாக பணி நடப்பது தான். வெறும் மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்களில் முடிக்கப்பட்ட இது நவீன இந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் செயல்திறனைக் காட்டுகிறது. எட்டு வழிப்பாதையாக விரிவுபடுத்தக்கூடிய வகையில் ஆறு வழிப்பாதையாக வடிவமைக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை, 3,564 வழி கிலோமீட்டர்களை உள்ளடக்கி உள்ளது.


















