Home செய்திகள் உலக செய்திகள் போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்

போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்

துபாய், மார்ச் 26- மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாயில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இப்போது தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து துபாய் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே துபாய் விமான நிலையத்தில் கிளம்ப வந்த பயணிகளுக்கு கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளது துபாய். இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அமீரகம் இதனால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமீரகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பாய் ஏர்போர்ட் குறிப்பாகத் துபாய் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கம் ஹோட்டல்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், விமான நிலையத்திலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் விமான சேவையும் கூட முடங்கிப் போனது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். நெகிழ்ந்த பயணிகள் இப்போது தான் துபாயில் விமான போக்குவரத்து மெல்லச் சீராகி வருகிறது. அங்கிருந்து பயணிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே வெளியேறும் பயணிகளுக்கு நினைவுப் பரிசுகளைக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது துபாய் சர்வதேச விமான நிலையம்.! இந்த திடீர் பரிசு பயணிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இது சின்ன விஷயம் தான் என்றாலும் நமது நாட்டிற்கு வந்துள்ள ஒருவர் போரால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் இருந்துள்ளார் என்பதை உணர்ந்து கிப்ட் கொடுத்துள்ளனர். இது இணையத்தில் பெரியளவில் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. பலர் துபாயின் அன்பையும் விருந்தோம்பலையும் தான் இது பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர்.