Home செய்திகள் தேசிய செய்திகள் மதத்தை கையில் எடுக்கும் மம்தா வளர்ச்சி முழக்கத்தோடு வரும் பாஜக

மதத்தை கையில் எடுக்கும் மம்தா வளர்ச்சி முழக்கத்தோடு வரும் பாஜக

கொல்கத்தா, ஏப்ரல் 6- இந்த முறை மேற்கு வங்க தேர்தல் வழக்கம் போல யாருமே எதிர்பார்க்காத பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அங்கு ஆளும் திரிணாமு் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் விஷயம் என்னவென்றால் இந்த முறை அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மத ரீதியான ஆதரவை நோக்கியும், பாஜக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்தும் களமிறங்கியுள்ளன. கடந்த 2019ல் மேற்கு வங்க தேர்தல் போது “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் பேசுபொருளாகவே இருந்தது. மம்தா “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்திற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினார். அவரை சீண்டும் வகையிலேயே பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர் காரை விட்டு இறங்கி வந்து “எங்கே இப்போது சொல்லுங்கள்” என்பது போலவும் கேட்டார். ஜெய் ஸ்ரீராம் “ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதாக அப்போது திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்தது. இந்த விவகாரத்தில் பல பாஜக தொண்டர்கள் கைதும் செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை நிலைமை மாறியுள்ளது. திரிணாமுல் தனது உத்தியை மாற்றி, பிரச்சாரத்தில் மதத்தை இணைத்துள்ளது. “ஜெய் ஸ்ரீராம்” பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது இல்லை எனச் சொல்லும் திரிணாமுல் நிர்வாகிகள் இந்த முறை அந்த கோஷத்தையே பயன்படுத்துகிறார்கள். கடந்த வாரம் அங்கு ராம நவமி கொண்டாட்டத்தின் போது பல இடங்களில் திரிணாமுல் நிர்வாகிகளின் “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்தைப் பார்க்க முடிந்தது.