
சென்னை: ஏப்ரல் 6
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று மாலை நேரத்தில் நிலவிய அமைதியை ஒரு வியக்கத்தக்க சம்பவம் திடீர்னு மாற்றியது.. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்த 100 கணக்கான டூரிஸ்டுகள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மணலில் பாதி புதைந்த நிலையில் ஒரு மர்ம பொருள் இருப்பதை பார்த்தார்கள். அருகில் சென்றபோதுபோதுதான் அது அம்மனின் சிலை என்பதை அறிந்து பரவசமடைநத்னர். மாமல்லபுரம் கடலில் அது ஒரு பிரம்மாண்டமான அம்மன் சிலை என்பது தெரியவந்தது.. சுமார் 3 அடி உயரமும் 200 கிலோ எடையுமும் கொண்ட இந்த அம்மன் சிலை கருங்கல்லால் ஆனது. அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
மாமல்லபுரம் சிலை இந்த சிலையின் சிறப்பம்சமாக, அம்மன் ஒரு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் 4 கைகளுடன் காட்சியளிக்கிறார்.. அந்த 4 கைகளிலும் முறையே சூலம், உடுக்கை, கத்தி மற்றும் சிலம்பு ஆகியவற்றை ஏந்தியபடி மிகவும் கம்பீரமான கோலத்தில் அந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.. கடலில் குளித்துக் கொண்டிருந்த டூரிஸ்டுகள் இந்த சிலையை பார்த்து கொடுத்த தகவலின்பேரில், அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் உடனடியாக மாமல்லபுரம் போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணலில் புதைந்து கிடந்த அந்த கனமான அம்மன் சிலையை பொதுமக்களின் உதவியுடன் மிகவும் கவனமாக தோண்டி எடுத்து வெளியே கொண்டு வந்தார்கள்.. 200 கிலோ எடை என்பதால் சிலையை தூக்க 5 பேருக்கு மேல் தேவைப்பட்டார்கள்..
கடலில் 3 அடி உயர அம்மன் பிறகு அந்த சிலையை நிமிர்த்தி வைத்தபோது அதன் முழுமையான உருவம் வெளிப்பட்டது.. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு அம்மன் சிலையை வழிபடத் தொடங்கினார்கள்..
பக்தர்கள் பரவசம் பொதுவாக இது போன்ற சிலைகள் பழங்கால கோவில்களில் இருந்து திருடப்பட்டு கடத்தப்படும் போது போலீசாருக்கு பயந்து கடலில் வீசப்படலாம் அல்லது யாராவது வீட்டில் வைத்து வழிபட பயந்து கடலில் விட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.. அதனால் இந்த சிலையின் பழமை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.. தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே இதன் முழு பின்னணி என்ன என்பது தெரியவரும்.. தற்போது அந்த சிலை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.. மாமல்லபுரம் கடற்கரையில் சிலை கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவியதால் அங்கே டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு கூட்டம் அதிகமாகிவிட்டது..
போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.. இந்த சிலை கடலில் இருந்து வந்தது ஒரு அதிசயம் என பக்தர்கள் பரவசத்துடன் சொல்கிறார்கள்.. அடுத்த 2 நாட்களில் இந்த சிலையின் முழு விவரத்தை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..!!


















