Home செய்திகள் உலக செய்திகள் மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை

மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை

அட்லாண்டா: ஜூலை 15.
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் அட்லாண்டாவில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நாளை அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, இங்கிலாந்து அணி​யுடன் பலப்பரீட்சை நடத்​துகிறது.
நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா தனது ஆதிக்​கத்​தைத் தொடரும் நோக்​கில் களமிறங்​கு​கிறது. மறு​புறம், 1966-ம் ஆண்​டுக்கு பிறகு உலகக் கோப்​பையை வெல்​லும் கனவுடன் காத்​திருக்​கும் இங்​கிலாந்து அணி இம்​முறை அந்த வாய்ப்பை நனவாக்​கும் உறு​தி​யுடன் அரை இறு​திக்​குள் நுழைந்​துள்​ளது.
அர்ஜெ்டினா கால் இறுதி சுற்​றில் சுவிட்​சர்​லாந்​துக்கு எதி​ராக 3-1 என்ற கோல் கணக்​கில் பெற்ற வெற்​றி, அந்த அணி​யின் தன்​னம்​பிக்​கையை மேலும் உயர்த்​தி​யுள்​ளது. இங்​கிலாந்து அணி​யானது நார்​வேக்கு எதி​ரான கால் இறுதி ஆட்​டத்​தில் ஒழுங்​கான அணிசேர்க்​கை​யுடன் கட்​டுப்​பா​டான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​யது. அரை இறுதி ஆட்​டத்​தில் அனை​வரது கவன​மும் அர்​ஜெண்​டினா கேப்​டன் லயோனல் மெஸ்ஸி மீது இருக்​கக்​கூடும். 39 வயதி​லும் அணி​யின் தாக்​குதல் ஆட்​டத்தை வழிநடத்தி வரும் மெஸ்​ஸி, தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் மேலும் ஒரு வரலாற்​றுச் சாதனையைப் படைக்க விரும்​பு​கிறார்.
அவருக்கு துணை​யாக ஜூலியன் ஆல்​வரஸ், என்சோ பெர்​னாண்​டஸ், அலெக்​சிஸ் மெக் அலிஸ்​டர் ஆகியோர் சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். நடப்பு தொடரில் 8 கோல்​களை அடித்​துள்ள மெஸ்​ஸி, 2 கோல்​கள் அடிக்க உதவி உள்​ளார். லீக் சுற்று மற்​றும் நாக் அவுட் சுற்​று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்று ஆகிய​வற்​றில் கோல் அடித்து அசத்​திய மெஸ்​ஸி, கால் இறுதி சுற்​றில் கோல் அடிக்​கத் தவறி​னார். தனது கோல் வேட்​டையை இங்​கிலாந்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடரச் செய்​வ​தில் லயோனல் மெஸ்ஸி தீவிரம் காட்​டக்​கூடும்.
இங்​கிலாந்து தரப்​பில் ஜூட் பெல்​லிங்​ஹாம், ஹாரி கேன், புக்​காயோ சாகா மற்​றும் டெக்​லன் ரைஸ் ஆகியோரின் செயல்​பாடு முக்​கிய​மான​தாக இருக்​கும். குறிப்​பாக பெல்​லிங்​ஹாமின் மிட்ஃபீல்டு ஆட்​ட​மும், ஹாரி கேனின் கோல் அடிக்​கும் திறனும் இங்​கிலாந்​தின் நம்​பிக்​கை​யாக பார்க்​கப்​படுகின்​றன.