Home விளையாட்டு மேற்கு வங்கத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு

மேற்கு வங்கத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு

கொல்கத்தா, மார்ச் 26- தேர்​தலின்​போது மேற்கு வங்​கத்​தின் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்ய வேண்​டும் என்று தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. மேற்கு வங்கத்​தில் வரும் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்க பாஜக​வின் மூத்த தலை​வரும், மாநிலங்​களவை எம்​.பி.​யு​மான சமிக் பட்​டாச்​சார்யா கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநலன் மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தல் நடை​பெறும் தேதி​களில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சுமூக​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வதை உறுதி செய்​ய​வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் பாது​காப்பு பலமாக இருப்​ப​தை உறுதி செய்​ய​வேண்​டும். எந்​த​வித அசம்​பாவித​மும் இன்றி தேர்​தல் நடை​பெறவேண்​டும். இதற்​காக தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு தேவை​யான உத்​தர​வு​களை கொல்​கத்தா உயர் நீதி​மன்றம் பிறப்​பிக்​க வேண்​டும். இவ்​வாறு அவர் அதில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் இந்த மனு கொல்​கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், நீதிபதி பார்த்​த​சா​ரதி சென் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: தேர்​தல் தேதி​களின்​போது மாநிலத்​தில் வாக்​குப்​ப​திவு அமை​தி​யாக​வும் சுமூக​மாக​வும் நடை​பெறு​வதை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்​ய​வேண்​டும். மேலும் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட​வேண்​டும். வாக்​குச்​சாவடிகளில் மக்​களுக்​குத் தேவை​யான அடிப்​படை வசதி​களான குடிநீர், கழிப்​பிடம் போன்ற வசதி​களை ஏற்​பாடு செய்​ய​வேண்​டும். அதே நேரத்​தில் வாக்​குச்​சாவடிகளில் மத்​திய போலீ​ஸாரை நிறுத்​தவேண்​டுமா அல்​லது மாநில போலீ​ஸாரை நிறுத்​தவேண்​டுமா என்று கூறும் அதி​காரம், மனு​தா​ரருக்கு இல்​லை. இதற்​கான முடிவு​களை தேர்​தல் ஆணை​யமே எடுக்​கும்​. இவ்​வாறு நீதிப​திகள்​ தெரிவித்​தனர்​.