
மும்பை, மார்ச் 27- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த 2023-ம் சீசனில் எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்ததில் இருந்து பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. அந்த அணி கடந்த ஆண்டு 7-வது இடத்தையே பிடித்திருந்தது. ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், உயர் மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியிருந்தார். ஆனால், இந்த சீசனுக்கு முன்னதாக அவர், சில சாதகமான மாற்றங்களுடன் களமிறங்குகிறார். இம்முறை பந்துவீச்சை வலுப்படுத்துவதிலும், நடுவரிசை பேட்டிங்கை சீரமைப்பதிலும் அந்த அணி அதிக கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு லக்னோ அணி கேன் வில்லியம்சனை வியூக ஆலோசகராக நியமித்துள்ளது.




















