Home செய்திகள் தேசிய செய்திகள் ராகுல் தமிழகத்தை புறக்கணிக்க காரணம்?

ராகுல் தமிழகத்தை புறக்கணிக்க காரணம்?

சென்னை: ஏப்ரல் 9 –
தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் தமிழகத்தையே சுற்றிச் சுழன்று வருகின்றனர். இந்தச் சூழலில் தான் திமுக கூட்டணியில் ஒரு புரியாத மௌனம் நிலவி வருகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. தமிழகத் தேர்தல் 2026 தொடர்பான அனைத்து அப்டேட்களும் ஒன்இந்தியா-வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஜாம்பவான்கள் வாரத்திற்கு ஒருமுறை தமிழகம் வந்து வாக்குச் சேகரிப்பதோடு, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து ஆக்ரோஷமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஸ்டாலின் – ராகுல் இடைவெளி? ராகுல் காந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே ஒரு சுமூகமான நட்பு எப்போதும் இருந்து வந்துள்ளது.. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது “ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்” என்று முதலில் அறிவித்தவர் ஸ்டாலின்.. அத்தகைய நெருக்கமான உறவு இருந்தும், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை ராகுல் காந்தி பாராமுகமாகப் பார்க்கிறாரா அல்லது திட்டமிட்டுப் புறக்கணிக்கிறாரா? என்ற சந்தேகம் இப்போது திமுக கூட்டணிக்குள்ளேயே வலுவாக உருவாகியுள்ளது.. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவடைய இன்னும் வெறும் 12 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் இதுவரை தமிழகம் பக்கம் தலை காட்டாதது திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது.. ராகுல் காந்தி வருவாரா காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல் காந்தியின் வருகை மிக அவசியம் என்று ஸ்டாலின் கருதுகிறார்.. இந்த இடங்கள் பாரம்பரியமாகவே காங்கிரஸுக்குப் பலம் வாய்ந்தவை என்பதால், அங்கே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.