Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு

ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு

திருப்பதி: ஏப்.24-
இந்து கடவுள்​களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி எச்​சரித்​துள்​ளார். இவர் நடிகர் பிர​காஷ்​ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அறங்​காவலர் குழு உறுப்​பினரும், பாஜகவின் ஆந்​திர மாநில செய்தித் தொடர்​பாள​ரு​மான பானு பிர​காஷ் ரெட்​டி, சமீபத்​தில் ராமர், லட்​சுமணர் பற்றி கேலி​யாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீது ரூ. 100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்​துள்ளார். இது தொடர்​பாக அவர் நடிகர் பிர​காஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டுமென ஆந்​திர டிஜிபி​யிடம் புகார் அளித்​துள்​ளார். இது தொடர்​பாக பானு பிர​காஷ் ரெட்டி கூறிய​தாவது: இந்து கடவுள்​கள், இந்து கலாச்​சா​ரங்​களை கொச்சை படுத்​தும் வகையில் சமூக வலை​தளத்​தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்​டது. அப்​படி பேசுபவர்​களின் பேச்சை இனி கேட்​டுக்​கொண்டு இருக்க முடி​யாது. சமீபத்​தில் இந்து கடவுள்களை இழி​வாக​வும், கேலி​யும், கிண்​டலு​மாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.