ரூ.100 மதிப்பிலான கோதுமைதிருடியவர் 45 ஆண்டுக்கு பிறகு கைது

போபால்: பிப்ரவரி 10-
மத்​திய பிரதேசத்​தில் 45 ஆண்​டு​களுக்கு முன்பு ரூ.100 மதிப்​பிலான கோது​மையை திருடிய​வர் இப்​போது கைது செய்யப்பட்​டுள்​ளார்.
கடந்த 1980-ம் ஆண்டு மத்​திய பிரதேச மாநிலம் பல்​காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன் சலீம் உட்பட 7 இளைஞர்​கள், ஒரு இரவில் வயலில் புகுந்து ரூ.100 மதிப்​பிலான கோது​மை​யைத் திருடிச் சென்​ற​தாகக் கூறப்​படு​கிறது. அப்​போது ஒரு குவிண்​டால் தரமான கோது​மை​யின் விலை சுமார் ரூ.115 ஆக இருந்​தது. 20 வயதே நிரம்​பி​யிருந்த சலீ​முக்​கு, அந்​தச் செயல் அவசரப்​பட்டு செய்த ஒரு தவறாகவோ அல்​லது தேவை​யி​னால் செய்த சிறு பிழை​யாகவோ தெரிந்​திருக்​கலாம்.
இந்த சம்​பவம் தொடர்​பாக காவல் துறை​யில் வழக்கு பதிவு செய்யப்​பட்ட நிலை​யில், சலீமின் குடும்​பத்​தினர் அந்த கிராமத்தை விட்டு வெளி​யேறி பக்​கத்து மாவட்​டத்​தில் குடியேறி உள்​ளனர். அங்கு ஒரு சிறிய கடையை நடத்தி வந்​துள்​ளார். இந்த திருட்டு மீதான வழக்கு நிலு​வை​யிலேயே இருந்​தது.
இந்​நிலை​யில், மத்​தி​ய பிரதேச காவல் துறை அதி​காரி​கள், குற்றத்தின் அளவைப் பொருட்​படுத்​தாமல், நீண்​ட​கால​மாக நிலுவை​யில் உள்ள வழக்​கு​களை முடிக்​க​வும், தலைமறை​வாக இருப்​பவர்​களைப் பிடிக்​க​வும் மாநிலம் தழு​விய இயக்​கங்​களை நடத்தி வரு​கின்​றனர். அந்த வகை​யில் ஜனவரி 1 முதல் 31 வரை ஒரு சிறப்பு முகாம் நடை​பெற்​றது.
பழைய வாரண்​டு​கள் மற்​றும் தீர்க்​கப்​ப​டாத விவ​காரங்​களை அதிகாரி​கள் மீண்​டும் ஆய்வு செய்​தனர். சலீ​முடன் கோதுமை திருட்​டில் ஈடு​பட்ட ஒரு நபர், அவர் இருக்​கும் இடம் பற்​றிய முக்கியத் தகவலை காவல் துறை​யினரிடம் வழங்கி உள்​ளார். அதன் அடிப்​படை​யில், கல்​தாகா புறக்​காவல் நிலைய போலீ​ஸார் சனிக்​கிழமை அன்று மு​தி​ய​வ​ராகி உள்ள சலீமை கைது செய்தனர். அவரிடம்​ போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வருகின்​றனர்​.