Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்

ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்

புதுடெல்லி: மார்ச் 9 –
டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.
தலைநகர் டெல்​லி​யில் சிவப்​பு, மஞ்​சள், நீலம், பச்​சை, ஊதா, இளஞ்​சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்​ளிட்ட பெயர்​களில் 10-க்​கும் மேற்​பட்ட வழித் தடங்​களில் மெட்ரோ ரயில் இயக்​கப்​படு​கிறது. இதில் பிங்க் மற்​றும் மெஜந்தா வழித்​ தடங்​கள் இணைக்​கப்​பட்டு நாட்​டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங் மெட்​ரோ) அமைக்கப்பட்​டுள்​ளது.
அதன்​படி பிங்க் வழித்​தடத்​தில் 12.3 கி.மீ. நீள மஜ்லிஸ் பார்க் – உஜ்பூர் – பாபர்​பூர் பாதை, மெஜந்தா வழித் ​தடத்​தில் 9.9 கி.மீ. நீள தீபாளி சவுக் – மஜ்லிஸ் பார்க் பாதையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். மேலும் 3 புதிய மெட்ரோ வழித் தடங்களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.
டெல்லி சரோஜினி நகர், நேதாஜி நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் அரசு ஊழியர்​களுக்​காக ரூ.15,200 கோடி மதிப்​பில் 9,350 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. இந்த வீடு​களின் சாவி​களை பயனாளி​களிடம் பிரதமர் மோடி வழங்​கி​னார். ஒட்​டுமொத்​த​மாக ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்தார், சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.
டெல்லி விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: இந்​திய பெண்​கள் அனை​வருக்​கும் மகளிர் தின வாழ்த்​துகளைத் தெரிவித்துக் கொள்​கிறேன். அரசி​யல், ஆட்சி நிர்​வாகம், அறிவியல், விளை​யாட்​டு, சமூக சேவை என அனைத்து துறைகளிலும் இந்​தி​யப் பெண்​கள் பல்​வேறு சாதனை​களைப் படைத்து வருகின்றனர். டெல்​லியை சர்​வ​தேச நகர​மாக உருவாக்க வேண்டும். இதற்​காக டெல்​லி​யின் உள்​கட்​டமைப்​பு​கள் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.
இதன் ஒரு பகு​தி​யாக டெல்லி மெட்ரோ சேவை, 375 கி.மீ. ஆக விரிவுபடுத்​தப்​ பட்​டுள்​ளது. தற்​போது நாட்​டின் முதல் ரிங் மெட்ரோ சேவை தொடங்​கப்​பட்​டிருக்​கிறது. டெல்​லி​யில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்​டில் மட்டும் டெல்​லி​யில் 1,800 மின்​சார பஸ்​கள் அறி​முகம் செய்யப்பட்டன. டெல்லி சுற்​று​வட்ட சாலை​யால் போக்​கு​வரத்து நெரிசல் குறைந்​துள்​ளது. யமுனை நதியை தூய்​மைப்​படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இரட்டை இன்​ஜின் அரசால் டெல்​லி​யில் வளர்ச்சி திட்​டப் பணி​கள் விரைவு பெற்​றுள்​ளன. மத்​திய அரசின் பல்​வேறு திட்​டங்​களால் நாடு முழு​வதும் ஏழைகள், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள் பலன் அடைந்து வருகின்​றனர். சுமார் 2 லட்​சம் நடை​பாதை வியா​பாரி​களுக்கு கடன் உதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் சுய உதவிக் குழுக்​களைச் சேர்ந்த 10 கோடி பெண்​களுக்கு பல்​வேறு நலத்திட்டங்​கள் அமல் செய்​யப்​பட்​டுள்​ளன. நாடு முழு​வதும் 3 கோடி லட்​சா​திபதி பெண்​களை உரு​வாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்​ளது. புதிய இந்​தி​யாவை உரு​வாக்கி வருகிறோம். நமது நாட்டை முன்​னேற்ற பாதை​யில் அழைத்​துச் செல்ல அனை​வரும் ஒன்​றிணைந்து உழைக்​க வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசி​னார்​.