Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை: மார்ச் 25-
சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.5 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. வியட்​நாமிலிருந்து புரூனே வழி​யாக கஞ்​சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்​கத்​துறை​யினர் கைது செய்​தனர்.தமிழக சட்​டசப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெறு​வதையொட்​டி, தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமுலில் இருப்​ப​தால், சென்னை விமான நிலை​யத்​தில் சுங்​கத்​ துறை​யினருக்கு தேர்​தல் ஆணை​யம் கொடுத்த அறி​வுறுத்​தலின்​படி, சென்​னைக்கு வரும் அனைத்து விமான பயணி​களை​யும் தீவிர​மாக கண்​காணித்து வரு​கின்​றனர்.
இந்​நிலை​யில், புரூனே நாட்​டில் இருந்து ராயல் புரூனே ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று முன்​தினம் இரவு வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களின் உடைமை​களை சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர். அப்​போது 25 வயதுடைய வடமாநில இளைஞர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது.
புரூனே வழியாக முதல்முறை டெல்​லி​யில் இருந்து வியட்​நாம் நாட்​டுக்கு சுற்​றுலா சென்​று​விட்​டு, வியட்​நாமில் இருந்து புரூனே நாடு வழி​யாக வந்த அவரின் சூட்​கேசை அதி​காரி​கள்​சோதனை செய்​தனர்.
அதில், ரூ.5 கோடி மதிப்​புள்ள பதப்​படுத்​தப்​பட்ட விலை உயர்ந்த, ஹைட்​ரோ​போனிக் கஞ்​சாவை மறைத்து வைத்​திருந்​ததை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர். இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், இளைஞரை கைது செய்​தனர்.
விசா​ரணை​யில், அவர் கடத்​தல் குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. வழக்​க​மாக தாய்​லாந்​து, இலங்​கை, அரேபிய நாடு​களில் இருந்து தான் உயர்ரக கஞ்சா கடத்தி
வரப்​படும். ஆனால் முதல் முறை​யாக, வியட்​நாம் நாட்​டில் இருந்து புரூனே வழி​யாக சென்​னைக்கு போதைப்​பொருள்​ கடத்​தி வந்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.