
புதுடெல்லி: ஏப்ரல் 8 –
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை குழு (MPC) நடத்திய 3 நாள் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்துக்கு மத்தியில், பொருளாதார வளர்ச்சியில் நிலைத்தன்மையைப் உருவாக்க வேண்டும் என்ற வகையில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைக்க முடிவு ஆர்பிஐ-யின் நாணய கொள்கை குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆர்பிஐ கவர்னர் aசஞ்சய் மல்ஹோத்ரா உலகளாவிய வளர்ச்சி குறைவதற்கான அபாயங்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். குறிப்பாக எரிபொருள் விலைகள் திடீரென உயர்வதும், மூலப்பொருள் பற்றாக்குறையும் பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். மத்திய கிழக்கு போர் உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும், பணவீக்கம் உயர்வதற்கான சிக்னல் அதிகரித்துள்ளதாகவும் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் மற்றும் விவசாய உர சந்தைகளில் ஏற்படும் தடைகளும், விலை உயரும் இந்தியாவின் நிதிச்சுமையை அதிகரித்து நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும் என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆண்டிற்கான இந்தியாவின் உண்மையான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.6% என மதிப்பிடப்பட்டுள்ளது என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் என அனைத்து விதமான கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும். நாட்டில் FMCG முதல் அனைத்து முக்கிய பொருட்களின் விலையும் உயர்வு வரும் வேளையில் நாட்டுக்கு மக்களுக்கான நிதி சுமை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வட்டி விகிதம் உயர்தாததும் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஈஎம்ஐ சுமையை உயர்த்தாமல் இருப்பது மூலம் ஆர்பிஐ சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு என்பது நாட்டின் வர்த்தக சந்தையை உருவாக்கும் என்பதால் ரெப்போ விகிதம் மாற்றாமல் வைக்கப்பட்டு வர்த்தகம், பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக சூழ்நிலையை ஆர்பிஐ உருவாக்கியுள்ளது.


















