Home விளையாட்டு லக்னோ அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

லக்னோ அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்

லக்னோ, ஏப்ரல் 13- ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. குஜ​ராத் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இந்த ஆட்​டம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் மைதானத்​தில் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்றது. முதலில் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கிய எய்ட்ன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் அதிரடி​யாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த அதிரடி நீடிக்​க​வில்​லை. மிட்​செல் மார்ஷ் 4 பந்​துகளில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி​யுடன் 11 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். எய்​டன் மார்க்​ரம் 21 பந்​துகளில் 5 பவுண்​டரி, ஒரு சிக்ஸருடன் 30 ரன்​கள் சேர்த்து வீழ்ந்​தார். அதன் பின்​னர் வந்த வீரர்​களில் யாரும் 20 ரன்​களைத் தாண்​ட​வில்​லை. கேப்​டன் ரிஷப் பந்த் 11 பந்​துகளில் 18 ரன்​களும், ஆயுஷ் பதோனி 9, நிக்​கோலஸ் பூரன் 19, அப்​துல் சமத் 18, முகுல் சவுத்ரி 18, ஜார்ஜ் லிண்டே 16 ரன்​கள் சேர்த்​தனர். முகமது ஷமி 12 ரன்களும், அவேஷ் கான் 4 ரன்​களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர். குஜ​ராத் அணி தரப்​பில் பிரசித் கிருஷ்ணா அபார​மாக பந்து​வீசி 28 ரன்​கள் கொடுத்து 4 விக்​கெட்​களைக் கைப்பற்றினார். அசோக் சர்மா 2 விக்​கெட்​களை​யும், முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 165 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் குஜ​ராத் அணி விளை​யாடத் தொடங்கியது.