
டாக்கா: மார்ச் 26 –
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள் 40 பயணிகளுடன் நேற்று மாலை பேருந்து கவிழ்ந்தது. பேருந்து ஆற்றுக்குள் மூழ்கிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

















