
சென்னை: மார்ச் 17 –
வணிக சமையல் காஸ் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் விறகு அடுப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு, ஏற்கெனவே பதிவு செய்த தேதியிலிருந்து, அடுத்த சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களாக இருந்தது, நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், ஊரக பகுதிகளில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரை ஐவிஆர்எஸ், செயலி, மிஸ்டு கால் என பல்வேறு முறைகளில் முயன்றும் பதிவு செய்ய முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். வணிக சமையல் காஸ் கிடைக்காததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டன.
சில ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்பது என சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சில ஓட்டல்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வருகின்றன. மேலும் மாணவர் தங்கும் விடுதிகள், பயணியர் தங்கும் விடுதிகள், தரை தளம் மட்டும் கொண்ட தனி வீடுகள் போன்றவற்றில் சுடுதண்ணீர் காய வைக்கவும், டீக்கடைகள் பலவற்றிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், அவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சென்னை பேசின் பாலம் அருகில் 24 மணி நேரமும் விறகு அடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றனர். தகடுகள், கம்பிகளை வெட்டி, வெல்டிங் செய்வது ஒரு இடத்திலும், அவற்றின் கூர்மையான பகுதிகளை நீக்குவது, பெயின்ட் அடிப்பது போன்ற தரத்தை கூட்டும் பணிகள் வெவ்வேறு இடங்களிலும் நடைபெறுகிறது. அதனால் வால்டாக்ஸ் சாலையில் கடந்த சில நாட்களாக விறகு அடுப்புகள் 3 சக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றவண்ணம் உள்ளது.
இது தொடர்பாக பேசின் பாலம் அருகில், கூட்ஸ் ஷெட் சாலையில் இயங்கி வரும் காஸ் மற்றும் விறகு அடுப்பு உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்களிடம் கேட்டபோது, “இதற்கு முன்பு காஸ் அடுப்புகளை தான் அதிகமாக செய்வோம்.

















