Home மாவட்டங்கள் பெங்களூர் வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: மார்ச் 18 –
தமிழக அரசு கொண்​டு​வந்த ‘உங்​கள் கனவை சொல்​லுங்​கள்’ திட்​டத்தை விமர்​சித்து சி.​வி.சண்​முகம் பேசிய கருத்​துகள் சர்ச்சையாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் நேற்று வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்​தில் பாலியல் வன்​கொடுமை அதி​கரித்​துள்​ள​தாகக் கூறி தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் பேசும்போது, ‘தி​ரா​விட மாடல் அரசு’ என்ற பெயரில், தமிழகத்​தில் திமுக கொள்​ளை​யடித்​துள்​ளது.
ஆட்சி முடிந்து போகும்​போது உங்​கள் கனவை சொல்​லுங்​கள் என முதல்​வர் ஸ்டா​லின் கேட்​கிறார். ‘எனக்கு நயன்​தாரா வேண்​டும், எனது கனவை நிறைவேற்​று​வா​ரா..’ ‘நயன்​தா​ராவை எனக்கு திரு​மணம் செய்து வையுங்​கள்’ என ஒரு​வர் கேட்​பார், நிறைவேற்​று​வா​ரா. இவ்​வாறு அவர் பேசினார்.
இவரது இந்த சர்ச்சைக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதன்படி, திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி., தமிழக காங்​கிரஸ் தலை​வர்செல்​வப்​பெருந்​தகை, பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு, மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் பால​பார​தி, தமிழச்சி தங்​க​பாண்​டியன் எம்​.பி., தென்​னிந்​திய நடிகர் சங்​கத்​தின் தலை​வர் நாசர் உள்​ளிட்​டோர் கண்​டனம் தெரி​வித்​தனர்.இதன் தொடர்ச்சியாக சி.வி.சண்முகத்தை கண்டித்து விழுப்புரத்தில் மகளிர் அமைப்பினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உருவ பொம்மையை எரித்தனர். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.