
திருவனந்தபுரம், ஏப்ரல் 7- கேரளாவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழவில் இறுதிக்கட்ட பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையே வளைகுடாவில் வெடித்துள்ள போரால் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம் எனச் சொல்கிறார்கள். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்குக் குறைந்தபட்சம் 71 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை கேரளாவில் மிகக் கடுமையான போட்டி இருக்கிறது. வளைகுடா போர் இதனால் அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இன்றுடன் கேரளாவில் பிரச்சாரம் முடியும் நிலையில், அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே வளைகுடாவில் நடந்து வரும் போர் கேரளா தேர்தலையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இது அங்குக் காங்கிரஸின் வெற்றியைப் பாதிக்கிறதாம். கேரளா தேர்தல் வடக்கு கேரளாவில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மலபார் பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இதுபோல வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், குறிப்பாக அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு கோட்டையாக இருக்கிறார்கள்.. வழக்கமாகத் தேர்தலின் போது 60% வளைகுடா வாழ் மலையாளிகள் கேரளாவுக்கு வந்து வாக்களிப்பார்கள். அவர்களுக்குக் காங்கிரஸ் ஆதரவு அமைப்புகள் சிறப்பு விமானங்களைக் கூட ஏற்பாடு செய்து கொடுக்கும்.


















