
சென்னை: மார்ச் 9-
சென்னையில் மார்ச் மாதம் 9-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,600 -க்கும், கிராமுக்கு ரூ 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,950-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது. சென்னையில் மார்ச் மாதம் 9-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,600 -க்கும், கிராமுக்கு ரூ 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,950-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது.

















