
சேலம் மார்ச் 20-
சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் ‘சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


















