Home செய்திகள் தேசிய செய்திகள் வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு

வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு

கயா: மே 6-
​வியட்​நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்​துள்​ளார். நேற்று பிஹார் மாநிலம் கயா​வுக்கு அவர் வருகை தந்​தார்.
இதையொட்டி கயா விமான நிலை​யத்​துக்​குச் சென்ற முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்​தார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராகவும் உள்ள டோ லாம், மே 7 ஆம் தேதி வரை இந்தியாவில் இருப்பார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்​கத்​தில் முதல்​வர் சாம்​ராட் கூறும்போது, “வியட்​நாம் அதிபரின் வரலாற்​றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலு​வாக​வும், பிணைப்​பாக​வும் உள்ள இந்தியா-​வியட்​நாம் உறவு​களை சந்​தேகமின்றி புதிய உயரங்களுக்​குக் கொண்டு செல்​லும்​” என்​றார்​.