Home விளையாட்டு வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? – டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்

வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? – டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்

சென்னை, ஏப்ரல் 11- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. தொடக்க வீரர்​களான சஞ்சு சாம்​சன், ருதுராஜ் கெய்க்​வாட் ஆகியோர் நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கின்​றனர்.ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்​வியடைந்​துள்​ளது.
தொடக்க ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தி​லும், கடைசி​யாக நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி​யிடம் 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் சிஎஸ்கே அணி தோல்வி கண்​டிருந்​தது. இந்த3 ஆட்​டங்​களை​யும் சிஎஸ்கே வெவ்​வேறு மைதானங்களில் (கு​வாஹாட்​டி, சேப்​பாக்​கம், எம்.சின்னசாமி) விளை​யாடி இருந்​தது. இந்த சீசனை உற்​சாகமற்ற தொடக்​கத்​துடன் ஆரம்​பித்​துள்ள சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்​டுமென்​றால் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டிலும் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் காண வேண்​டியது அவசி​யம். தென் ஆப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரெ​விஸ் இல்​லாததும் அணி​யின் சமநிலை​யைப் வெகு​வாக பாதித்​துள்​ளது. அதிரடி வீர​ரான பிரெ​விஸ் காயத்​தில் இருந்து மீண்டுள்ளதால் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இருப்​பினும், கணுக்​கால் தசைப்​பிடிப்பு காரண​மாக இந்த சீசனில் இன்​னும் ஒரு போட்​டி​யில் கூட விளை​யா​டாத எம்​.எஸ். தோனி எப்​போது திரும்​பு​வார் என்​பது இன்​னும் தெளிவு படுத்தப்படவில்லை. பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி வலு​வான தொடக்​கத்தை அளிப்​பது அவசி​யம். நடப்பு தொடரில் இவர்​களிடம் இருந்து இது​வரை பெரிய அளவிலான ஆட்​டம் வெளிப்​பட​வில்​லை. சஞ்சு சாம்​சன் 6,7,9 ரன்​களில் நடையை கட்​டி​யிருந்​தார். அதேவேளை​யில் ருது​ராஜ் கெய்க்​வாட் 6,28,7 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இந்த ஜோடி முதல் 6 ஓவர்​களில் விக்​கெட்​டு​களை இழக்காமல் அதிரடி​யாக ரன் சேர்த்​தால் மட்​டுமே, அடுத்து வரும் ஆயுஷ் மாத்​ரே, ஷிவம் துபே போன்​றவர்​கள் பயமின்றி விளை​யாட முடி​யும். ஜடேஜாவுக்கு பதிலாக அணிக்​குள் வந்​திருக்​கும் சாம்​சன், அதிரடி ஆட்​டத்​தின் வாயி​லாக மட்​டுமே தனது டிரேடிங்கை நியாயப்​படுத்த முடி​யும். கேப்​ட​னாக ருது​ராஜ் கெய்க்​வாட் மற்​றொரு தோல்​வியை சந்​தித்​தால் அவர் மீது கூடு​தல் அழுத்​தம் உரு​வாகக்​கூடும். இதனால் அவர், கூடு​தல் பொறுப்​புடன் விளை​யாடக்​கூடும்.