Home விளையாட்டு வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே

வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே

சென்னை, ஏப்ரல் 3- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது.ருதுராஜ் கெய்க்வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.
டாப் ஆர்​டர் பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறினர். நடு​வரிசையில் சர்ஃப​ராஸ் கான், ஷிவம் துபே, கார்த்​திக் சர்மா ஆகியோ​ரும் ஏமாற்​றம் அளித்​தனர். 8-வது வீர​ராக களமிறங்​கிய ஜேமி ஓவர்​டன் 43 ரன்​கள் சேர்த்​ததன் காரண​மாக சிஎஸ்கே அணி​யால் அந்த ஆட்​டத்​தில் 100 ரன்​களை கடக்க முடிந்​தது. பந்​து​வீச்​சிலும் சிஎஸ்கே அணி உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறியது. ராஜஸ்​தான் அணி​யின் 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி தனது தாக்​குதல் ஆட்​டத்​தால் மேட் ஹென்​றி, கலீல் அகமது, நூர் அகமது, அன்​ஷுல் கம்​போஜ், ஜேமி ஓவர்​டன் ஆகியோரை உள்​ளடக்​கிய ஒட்​டுமொத்த சிஎஸ்கே அணி​யின் பந்​து​வீச்​சை​யும் கடும் சிதைவுக்கு உட்​படுத்​தி​யிருந்​தார்.
இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி சொந்த மண்​ணில் பேட்​டிங், பந்​து​வீச்சு என அனைத்து துறை​யிலும் மேம்​பட்ட திறனை வெளிப்​படுத்​தி​னால் மட்​டுமே வெற்​றியை வசப்​படுத்த முடி​யும். சேப்​பாக்​கம் ஆடு​களம் கடந்த மாதம் நிறைவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்​றி​லும் ரன்​கு​விப்​புக்கு சாதக​மாக இருந்​தது.
அதேவளை​யில் சுழற்​பந்து வீச்​சுக்கு பெரிய அளவில் ஒத்​துழைக்​க​வில்​லை. இதே நிலையே தற்​போதும் தொடரக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.