Home விளையாட்டு 14,000 ரன்​களை எட்​டும் விராட் கோலி

14,000 ரன்​களை எட்​டும் விராட் கோலி

பெங்​களூரு, மார்ச் 23- டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18 ஆண்​டு​களாக ஐபிஎல் போட்​டிகளில் பெங்​களூரு அணிக்​காக விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்​டி​யில் முதன்​முறை​யாக பெங்​களூரு அணி கோப்​பையை வென்​றிருந்​தது. அவர் இது​வரை ஐபிஎல் போட்​டி​யில் 267 ஆட்​டங்​களில் பங்​கேற்று 8,661 ரன்​களைக் குவித்​துள்​ளார். இதில் 63 அரை சதங்​கள் அடங்​கும். மேலும் 339 ரன்​கள் சேர்த்​தால் ஐபிஎல் போட்​டிகளில் 9 ஆயிரம் ரன்​களைக் குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார். ஐபிஎல், சாம்​பியன் லீக் டி20 போட்​டிகள் என 282 ஆட்​டங்​களில் ஆர்​சிபி அணிக்​காக பங்​கேற்று மொத்​தம் 9,085 ரன்​களைக் குவித்​துள்​ளார் விராட். இன்​னும் 2 சீசன்​களில் அவர் விளை​யாடும்​போது ஒரே ஒரு அணிக்​காக 10 ஆயிரம் ரன்​களை குவிக்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறு​வார் என எதிர்​பார்க்கப்படுகிறது. இது​வரை 414 டி20 போட்​டிகளில் (ஐபிஎல், சாம்​பியன்ஸ் லீக் டி20, சர்​வ​தேச டி20 என அனைத்​தும் சேர்த்​து) விளை​யாடி 13,543 ரன்​களை விராட் கோலி எடுத்​துள்​ளார். வரும் சீசனில் விளை​யாடும்​போது அவர் விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்ட வாய்ப்​புள்​ளது. அவ்​வாறு அவர் 14 ஆயிரம் ரன்​களை எட்​டி​னால் டி20 போட்​டிகளில் 14 ஆயிரம் ரன்​கள் குவித்த முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை விராட் கோலி பெறு​வார்.