Home விளையாட்டு 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்

150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்

கொல்கத்தா, ஏப்ரல் 11- ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் லக்​னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. 182 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி கடைசி பந்​தில் த்ரில் வெற்​றியை வசப்​படுத்​தி​யது. இந்த அணி​யில் அணி​யின் இளம் பேட்​ஸ்​மே​னான 21 வயதான முகுல் சவுத்​ரி​யின் அதிரடி ஆட்​டம் முக்​கிய பங்கு வகித்​தது.ஒரு கட்​டத்​தில் லக்னோ அணி 16 ஓவர்​களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 128 ரன்​கள் எடுத்து தோல்​வி​யின் பிடி​யில் சிக்கியிருந்​தது. அந்த அணி​யின் வெற்​றிக்கு கடைசி 4 ஓவர்​களில் 54 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. நெருக்கடியான அந்த நிலை​யில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளை​யாடி 27 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய 17-வது ஓவரில் முகுல் சவுத்​ரி, தோனியை போன்று ஹெலி​காப்​டர் ஷாட் அடித்து அசத்​தி​னார். இது அனை​வரை​யும் வெகு​வாக கவர்ந்​தது. ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்த முகுல் சவுத்ரி ஜெய்ப்பூரில் உள்ள ஆரவல்லி பயிற்சி மையத்​தில் ஆரம்பத்​தில் ஒரு மிதவேகப் பந்​து​வீச்​சாள​ராகவே தனது கிரிக்​கெட் பயணத்​தைத் தொடங்​கி​னார். ஆ​னால் விக்கெட் கீப்​ப​ராக இருப்​ப​தற்கு வேறு வீரர் இல்​லாத​தால் விக்​கெட் கீப்​ப​ராக மாறி​யுள்​ளார். இதன் பின்​னர் பயிற்சியாளர்​கள் அவரது இயல்​பான அதிரடி ஆட்​டத் திறமை​யைக் கண்​டறிந்​து, பேட்​டிங் பக்​கம் திசை​திருப்பினர். கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம் நடந்த சையத் முஷ்​டாக் அலி கோப்பை தொடரில், டெல்லி அணிக்கு எதி​ரான கடைசி ஓவரில் முகுல் சவுத்​ரி​யின் அணிக்கு 25 ரன்​கள் தேவைப்​பட்​டன. சாத்​தி​யமே இல்லை என்று தோன்​றிய அந்த இலக்கை மிக நெருக்​க​மாகக் கொண்டு வந்த முகுல் சவுத்​ரி, கடைசி பந்​தில் 5 ரன்​கள் தேவை என்ற நிலைக்கு ஆட்​டத்தை மாற்​றி​னார். அந்த அற்​புத​மான இன்​னிங்​ஸ்​தான் அவரை ஐபிஎல் அணிகளின் பார்​வை​யில் பட வைத்​தது. அந்த சிறப்​பான ஆட்​டத்​துக்​குப் பிறகு, லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் முகுல் சவுத்​ரியை ரூ.2.60 கோடி ஏலத்​தில் எடுத்​தது. அதில் இருந்து 5 மாதங்​களுக்​குப் பிறகு தற்​போது அதை​விடப் பெரிய​தாக ஐபிஎல் மேடை​யில் ஒரு சூழல் முகுல் சவுத்​ரிக்கு கொல்கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அமைந்​தது.