
பெங்களூரு: ஏப்ரல் 8 –
கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.
நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
கல்வி அமைச்சர் மது பங்காரப்பா முடிவுகளை வெளியிடுவார் என்றும தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இரண்டாம் பி.யு.சி. தேர்வுகள் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 28 முதல் மார்ச் 17 வரை நடைபெற்றன. மொத்தம் 7,10,363 மாணவர்கள் இந்தத் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர், மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஏப்ரல் 8 அன்று முடிவுகளை வெளியிட வாரியம் முதலில் அறிவுறுத்தியிருந்தாலும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் செயல்முறையின் காரணமாக முடிவு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. முடிவுகள் நாளை வெளியாகும்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் சரி பார்க்கலாம். மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2ஆம் பியூசி தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால் மாணவர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.




















