Home செய்திகள் தேசிய செய்திகள் 2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் அசாமில் இருந்து வெளியேற்றம்

2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் அசாமில் இருந்து வெளியேற்றம்

குவாஹாட்டி: ஜூலை 15.
கடந்த 2 ஆண்​டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரி​வித்​துள்​ளார்.
அண்டை நாடான வங்​கதேசத்தை சேர்ந்த மக்​கள் இந்​தி​யா​வின் மேற்​கு​வங்​கம், அசாம், வடகிழக்கு மாநிலங்​களில் சட்டவிரோதமாக குடியேறி வரு​கின்​றனர்.
அங்​கிருந்து இவர்​கள் தென்​மாநிலங்​களுக்​கும் ஊடுருவி வரு​கின்​றனர். இதைத் தடுக்க மத்திய அரசும் பல்​வேறு மாநில அரசுகளும் அதிதீ​விர நடவடிக்கைகளை மேற்​கொண்டு வரு​கின்​றன.
குறிப்​பாக அசாம் மாநில அரசு, சட்​ட​விரோத​மாக குடியேறிய வங்​கதேச மக்​களை அவர்களின் சொந்த நாட்​டுக்கு திருப்பி அனுப்பி வரு​கிறது.
இது தொடர்​பாக அசாம் சட்​டப்​பேர​வை​யில் எழுப்​பப்​பட்​ட கேள்விக்கு முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறிய​தாவது:
சட்​ட​விரோத​மாக குடியேறிய​வர்​களை நாடு கடத்த அசாம் அரசு உறு​திபூண்டு உள்​ளது.
இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசின் உத்​தர​வு​களை அசாம் அரசு கண்​டிப்​புடன் பின்​பற்​றுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையி​லான 2 ஆண்டு காலத்​தில் அசாமில் இருந்து 1,679 வங்கதேச மக்​கள் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளனர். அவர்​கள் வங்கதேசத்​துக்கு பத்​திர​மாக திருப்பி அனுப்​பப்​பட்​டனர்.
சட்​ட​விரோத குடியேறிகளை வெளி​யேற்​றும்​போது மனி​தாபி​மான அடிப்​படை​யில் அசாம் அரசு செயல்​படு​கிறது. மனித உரிமை மீறல்​கள் முற்​றி​லு​மாக தவிர்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு சர்​மா தெரிவித்​துள்​ளார்​.