Home விளையாட்டு 2027 ஜனவரியில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் தொடர்

2027 ஜனவரியில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் தொடர்

மெல்பர்ன், மார்ச் 23- இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் கிரிக்​கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்​கும் என்று கிரிக்​கெட் ஆஸ்​திரேலி​யா (சிஏ) அறிவித்​துள்​ளது. இரு நாடு​களிடையே 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொட​ராக இது இருக்​கும். மேலும் இந்​தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்​டில் வங்​க தேசத்​துடன் 2 டெஸ்ட் போட்​டிகளி​லும், அக்​டோபரில் தென் ஆப்​பிரிக்கா​வுடன் 3 டெஸ்ட் போட்டிகளி​லும், டிசம்​பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்​துடன் 4 டெஸ்ட் போட்​டிகளி​லும், ஜனவரி முதல் மார்ச் வரை இந்​தி​யா​வுடன் 5 டெஸ்ட் போட்​டிகளில் ஆஸ்திரேலிய அணி மோதும்.