4 ரன்களில் வெற்றியை தவறவிட்ட நேபாளம்

மும்பை, பிப். 9- ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரி​வில் உள்ள 2 முறை சாம்​பிய​னான இங்கிலாந்​து, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஜேக்​கப் பெத்​தேல் 35 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும் கேப்​டன் ஹாரி புரூக் 32 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்​ளும் சேர்த்​தனர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 71 ரன்​கள் சேர்த்​தது. இறுதிக்கட்டத்தில் மட்​டையை சுழற்​றிய வில் ஜேக்ஸ் 18 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 39 ரன்​கள் விளாசி​னார்.முன்​ன​தாக பில் சால்ட் 1 ரன்​னில் நடையை கட்​டி​னார். மற்றொரு தொடக்க வீர​ரான ஜாஸ் பட்​லர் 17 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார். டாம் பேன்​டன் 2, சேம் கரண் 2 ரன்​களில் நடையை கட்​டினர். நேபாளம் அணி சார்​பில் தீபேந்​திர சிங் ஐரி, நந்​தன் யாதவ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 185 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நேபாளம் அணிக்கு குஷால் புர்​தேல் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். இதனால் 3 ஓவர்​களில் 31 ரன்​கள் விளாசப்​பட்​டன. மற்றொரு தொடக்க வீர​ரான ஆசிஃப் ஷேக் 7 ரன்​களில் லியாம் டாவ்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அதிரடி​யாக விளை​யாடிய குஷால் புர்​தேல் 17 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் அவுட் ஆனார். பவர்​பிளே​வில் நேபாளம் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 47 ரன்​கள் எடுத்​தது. இதன் பின்​னர் கேப்​டன் ரோஹித் பவுடெல், தீபேந்​திர சிங் ஐரி ஜோடி சீராக ரன்​கள் சேர்த்து இங்​கிலாந்து பந்துவீச்சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுத்​தது. இந்த ஜோடியின் சிறப்​பான ஆட்​டத்​தால் நேபாளம் அணி 12 ஓவர்​களில் 101 ரன்​கள் குவித்​தது. 82 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை சாம் கரண் பிரித்​தார். தீபேந்​திர சிங் ஐரி 29 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் சேம் கரண் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். லியாம் டாவ்​சன் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் பவுடெல் வெளி​யேறி​னார்