
சென்னை: மே 30-
செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றது முதல், பல்வேறு துறைகளின் செயலர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக நிதித்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் என பல்வேறு துறைகளின் செயலர்கள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று 40 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் சிலருக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.


















