Home செய்திகள் தேசிய செய்திகள் 5 நாடுகள் பயணத்தில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்

5 நாடுகள் பயணத்தில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்

புதுடெல்லி, மே 22- ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்​லாந்​து, சுவீடன், நார்​வே, இத்​தாலி ஆகிய 5 நாடு​களுக்​கான பயணத்தை பிரதமர் நரேந்​திர மோடி நிறைவு செய்​துள்​ளார். இந்​தப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், வேளாண்​மை, மற்​றும் கலாச்​சார முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல்​வேறு பரிசுப் பொருட்​களை உலகத் தலை​வர்​களுக்கு அவர் வழங்​கி​னார். இத்​தாலி​யின் ரோம் நகருக்கு சென்​ற​போது, அந்​நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்​கு, பிரத்​யேக​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2 பட்டு சால்​வை​களை (முகா பட்டு சால்​வை, ஷிருய் லில்லி பட்டு சால்​வை) மோடி பரி​சாக வழங்​கி​னார். அசாமின் ‘தங்​கப் பட்​டு’ என்று அழைக்​கப்​படும் முகா பட்​டு, பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் அரிய வகை கைத்​தறி ஜவுளி​யாகும். செயற்கை சாயங்​கள் ஏது​மின்​றி, அதன் இயற்​கை​யான தங்க நிறம், நீடித்து உழைக்​கும் தன்​மை, சூழலுக்கு பாதிப்​பில்லா தயாரிப்பு ஆகிய​வற்​றுக்​காக இது மிக​வும் மதிக்​கப்​படு​கிறது. இத்​தாலிய அதிபர் செர்​ஜியோ மட்​டரெல்​லா​வுக்​கு, பாரம்​பரிய பளிங்கு வேலைப்​பாடு கொண்ட பெட்​டி​யுடன் இந்​திய இசை மேதைகளான பண்​டிட் பீம்​சென் ஜோஷி, எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி ஆகியோரின் இசை குறுந்​தகடு​களை​யும் பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார். ஐ.நா. சபை​யின் உணவு மற்​றும் வேளாண்மை அமைப்​பின் இயக்​குநர் ஜெனரல் கியூ டோங்​யு​விடம் இந்​தி​யா​வின் மிகச்​சிறந்த தானி​யங்​களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்​கி​னார். இதில் கேரளா​ வின் பாலக்​காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்​கத்​தின் கோவிந்​தோ​போக் அரிசி, இந்​தோ-கங்கை சமவெளி​யின் பாஸ்​மதி அரிசி, அசாம் பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் ஜோஹா அரிசி, உ.பி.​யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்​பெற்​றிருந்​தன. பாரம்​பரிய தானி​யங்​களு​டன் சேர்த்​து, ஆரோக்​கிய​மான சிறு​தானிய ஸ்நாக்​ஸ்​களை கியூ டோங்​யுவுக்கு பிரதமர் மோடி வழங்​கி​னார். ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்​யானுக்கு குஜ​ராத்​தின் அரிய ஜவுளி பாரம்​பரிய​மான, ‘வாழ்​வின் மரம்’ வடிவத்தை கொண்ட ரோகன் ஓவி​யம் வழங்​கப்​பட்​டது. மேலும், புவி​சார் குறி​யீடு பெற்ற கேசர் மாம்​பழங்​கள், மேகாலயா அன்​னாசிப் பழங்​கள் உள்​ளிட்ட பாரம்​பரிய இந்​திய விளைபொருட்​களும் வழங்​கப்​பட்​டன.