Home மாவட்டங்கள் பெங்களூர் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

சென்னை: மார்ச் 7-
​மாநிலங்​களவை உறுப்​பினர் தேர்​தலில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​கள் 4 பேர், அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் 2 பேர் என மொத்​தம் 6 பேரின் வேட்​புமனுக்​களும் ஏற்​கப்​பட்​டன. ராம​தாஸ் ஆதர​வாளர் உள்​ளிட்ட மற்ற அனை​வரது மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​ட​தால், மேற்​கண்ட 6 பேரும் போட்​டி​யின்றி தேர்​வாவது உறு​தி​யாகி​யுள்​ளது.
தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்​வான திமுக​வின் திருச்சி சிவா, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், என்​.ஆர்​.இளங்​கோ, கனி​மொழி சோமு, அதி​முக​வின் தம்​பிதுரை மற்​றும் அதி​முக கோட்​டா​வில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தமா​கா​வின் ஜி.கே.​வாசன் ஆகியோரின் 6 ஆண்டு பதவிக் காலம் ஏப்​ரல் 2-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.
இதையொட்​டி, 6 புதிய மாநிலங்​களவை உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுக்க மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் கடந்த பிப்​.18-ம் தேதி அறி​விப்பு வெளி​யிட்​டது. தேர்​தல் ஆணைய அறிவிக்​கை​யின்​படி, வேட்​புமனு தாக்​கல் கடந்த பிப்​.26-ம் தேதி தொடங்​கியது. திமுக கூட்​ட​ணி​யில், திமுக சார்​பில் அக்​கட்​சி​யின் மாநிலங்​களவைக் குழு தலை​வர் திருச்சி சிவா, செய்​தித் தொடர்பு பிரிவு செய​லா​ளர் கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரன், காங்​கிரஸ் சார்​பில் கிறிஸ்​டோபர் திலக், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர்.
அதி​முக கூட்​ட​ணி​யில் அதி​முக சார்​பில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் தம்​பிதுரை. பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். மேலும், பாமக நிறு​வனர் ராம​தாஸ் தரப்​பில் ப.சு​வாமி​நாதன் உள்​ளிட்ட 6 சுயேச்சை வேட்​பாளர்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். வேட்​பு மனு தாக்​கல் கடந்த 5-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.
இந்​நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் முன்​னிலை​யில், தேர்​தல் நடத்​தும் அதி​காரி இரா.​சாந்​தி, உதவி தேர்​தல் நடத்​தும் அதி​காரி பி.தேன்​மொழி ஆகியோர் வேட்​புமனுக்​களை நேற்று பரிசீலனை செய்​தனர்.
அப்​போது, அன்​புமணி​யின் வேட்​புமனுவை ஏற்​கக்​கூ​டாது என்று சுவாமி​நாதன் ஆட்​சேபம் தெரி​வித்​தார். அன்​புமணி பாமக​வின் தலை​வர் இல்லை என்​ப​தற்​கான நீதி​மன்ற உத்​தரவு மற்​றும் தேர்​தல் ஆணைய பதில்​கள் அடங்​கிய ஆட்​சேப மனுவை வழங்​கி​னார். அவரது ஆட்​சேபங்​களை நீதி​மன்​றம் அல்​லது தேர்​தல் ஆணை​யத்​திடம் தெரிவிக்​கலாம் என்று தேர்​தல் அதி​காரி​கள் அறி​வுறுத்​தினர்.