Home செய்திகள் தேசிய செய்திகள் 6 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மட்டும் ஆதார்

6 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மட்டும் ஆதார்

புதுடெல்லி: ஏப்ரல் 10-
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:
பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன. இதனால் ஊடுரு​வல்​காரர்​கள் எளி​தாக ஆதார் எண்ணை பெற்​று​விடு​கின்​றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியருக்கு மட்​டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்​டும். அதற்கு மேற்​பட்​ட​வர்களுக்கு ஆதார் எண் வழங்​கப்​படக்​கூ​டாது.இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்டு உள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு எடுத்​துக்​ கொள்ளப்படும்​ என்​று எதிர்​​பார்​க்​கப்​படு​கிறது.