Home விளையாட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி. வெற்றி

8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி. வெற்றி

ஆக்லாந்து, மார்ச் 21 – தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 3-வது டி20 கிரிக்கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. டாம் லேதம் 63 ரன்​கள் சேர்த்து அசத்​தி​னார். ஆக்​லாந்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணியை 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 136 ரன்​கள் என்ற நிலை​யில் கட்​டுப்​படுத்​தினர் நியூஸிலாந்து அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள். அதி​கபட்​ச​மாக கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய வேகப்​பந்து வீச்​சாள​ரான கோபானி மொகோயேனா 20 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 26 ரன்​கள் சேர்த்​தார். ஜார்ஜ் லின்டே 23, டயான் ஃபாரெஸ்​டர் 17, ஜெரால்டு கோட்ஸி 16, டோனி டி ஸோர்ஸி 15, கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 15, ஜேசன் ஸ்மித் 10 ரன்​கள் சேர்த்​தனர். வியான் முல்​டர் 0, ரூபின் ஹெர்​மான் 4, கேப்​டன் கேசவ் மகா​ராஜ் 3 ரன்​களில் நடையை கட்​டினர். நியூஸிலாந்து அணி தரப்​பில் கைல் ஜேமிசன், மிட்​செல் சாண்ட்​னர், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். லாக்கி பெர்​குசன், கோல் மெக்​கோன்​கி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 137 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 16.2 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தனது 4-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீர​ரான டாம் லேதம் 55 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான டேவன் கான்வே 26 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேசவ் மகா​ராஜ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு டேவன் கான்​வே, டாம் லேதம் ஜோடி 11 ஓவர்​களில் 96 ரன்​களை குவித்து அசத்​தி​யது. டிம் ராபின்​சன் 17, நிக் கெல்லி ஒரு ரன் சேர்த்​தனர். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. முதல் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 68 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.