சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பு

பெய்ஜிங்: பிப்ரவரி 2- சீனாவின் நாணயமான யுவானின் உலகளாவிய பயன்பாட்டை விரிவுபடுத்தவும், அதை ஒரு சர்வதேச இருப்பு நிலைக்கு உயர்த்தி ஒரு “வலுவான நாணயமாக” உருவாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க டாலருக்கு விடுக்கப்படுட்ட ஒரு சவாலாக கருதப்படுகிறது. அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தை பயன்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சீன நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டூரையில்; சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான நாணயத்தை சீனா உருவாக்க வேண்டும் என்றும், உலகளாவிய இருப்பு நிலையை அடைய வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.
2012 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, டாலருக்குப் போட்டியாக யுவான் (RMB) ஒரு சர்வதேச நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் கடுமையாக வலியுறுத்தி வருகிறார். வங்கி சொத்துக்கள், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் மூலதன சந்தை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், வலுவாக இல்லை. நிதி அதிகார மையத்தை உருவாக்குவது நீண்டகால பணியாக இருக்கும் என்று ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.