மத்திய பட்ஜெட்டில் திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை: சசி தரூர் கருத்து

புதுடெல்லி: பிப்ரவரி 2-
மத்​திய பட்​ஜெட் 2026-27-ல் ஒரு மலை​யாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்​கும் எது​வும் இல்லை என்று காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கூறி​னார்.
திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் நேற்று நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆயுர்​வேதத்​தில் நீண்ட பாரம்​பரி​யம் கொண்ட கேரளா​வுக்கு ஓர் ஆயுர்​வேத நிறு​வனம் தேவை. அகில இந்திய ஆயுர்​வேத நிறு​வனம் தொடர்​பான அறி​விப்​புக்​காக காத்​திருந்​தோம். ஆனால் நாங்​கள் கேரளா​வின் பெயரை கேட்​க​வில்​லை.மீனவர்​கள் மற்​றும் தேங்​காய் தொடர்​பான அறிவிப்புகளில் கேரளா இடம்​பெறும் என்று எதிர்பார்க்கப்பட்​டது. ஆனால் அவற்​றி​லும் கேரளா குறிப்​பிடப்​பட​வில்​லை. கப்​பல் பழுது​பார்ப்பு தொடர்​பான அறிவிப்​பு​களில் வாராணசி மற்​றும் பாட்​னா​வின் பெயர்களை குறிப்​பிட்​டனர்.ஆனால் கேரளாவை குறிப்​பிட​வில்​லை. இது சற்று ஆச்சரிய​மாக உள்​ளது. என்​றாலும் பட்​ஜெட் ஆவணத்​தில் கேரளா​வுக்​கான திட்​டங்​கள் இடம்​பெற்​றிருக்​கும் என கருதுகிறேன். அதை இன்​னும் நான் படிக்​க​வில்​லை.
அமைச்​சரின் உரை​யில் மிகக் குறை​வான விவரங்​களே இருந்​தன. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த பட்​ஜெட்​டில் எனக்கு திருப்தி அளிக்கும் எது​வும் இல்​லை” என்​றார்​.