
புதுடெல்லி: பிப்ரவரி 4-
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு 25 தொகுதிகள் கொடுத்து சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 4-ல் வெற்றி பெற்றது. மீதம் உள்ள 16-ல் பாஜகவுக்கு இரண்டாமிடம் கிடைத்தது. அடுத்து, மக்களவைத் தேர்தலில் அதிமுக விலகிய நிலையில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 12 தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்ற கட்சிக்கு, சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்குகளில் 59 தொகுதிகளில் இரண்டாவது, 64-ல் மூன்றாவது இடம் கிடைத்தது.
இவற்றை முன்னிறுத்தி பாஜகவின் தேசியத் தலைமை அதிமுகவிடம் 65 தொகுதிகள் கேட்டுள்ளது. இதற்கு வலுவானக் காரணமான தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கட்சித் தலைமை குறிப்பிட்டுள்ளது.
உதாரணமாக, சமீபத்தில் பிரதமர் மோடியின் மதுராந்தகம் கூட்டத்துக்கும் சுமார் 5 லட்சம் பேர் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவினர் மட்டுமே சுமார் 3 லட்சம் என்பது தங்கள் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை காட்டுவதாக தலைமை வாதிடுகிறது.இதுகுறித்து தேசிய பாஜக வட்டாரம் கூறுகையில், “மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்கிறது. முக்கியமாக விவசாயிகளுக்கான, கிசான் சம்மான் யோஜனாவில் ரூ.6,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதற்கு முக்கிய ஆதரவு உள்ளது.அதிமுக தரப்பில் எங்களுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை. எங்களிடம் நட்புரீதியாகப் பேசும் அதிமுக முக்கியத் தலைவர்கள் மூலம் தகவல் பரிமாறப்படுகிறது. இதில் கடந்த தேர்தலை விட சற்று அதிகமாக 25 தொதிகளை ஒதுக்க அதிமுக விரும்புவதாகக் தெரிகிறது. ஆனால், குறைந்தது 35 முதல் 45 வரை அளிக்க அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துகிறது. இதற்கு கடந்த தேர்தலில் பாஜக நியமித்த வாக்குச்சாவடி முகவர்கள் (பிஎல்ஏ) எண்ணிக்கையை நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையப் புள்ளிவிவரப்படி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, திமுக சார்பில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பிஎல்ஏக்கள் நியமிகப்பட்டனர். பிற கட்சிகளில் பாஜக மட்டுமே மிக அதிகமாக 61,438 பிஎல்ஏக்களை நியமித்திருந்தது. தேமுதிக 36,338, காங்கிரஸ் 30,419 மற்றும் பிற கட்சிகள் மிகக் குறைவாகவே பிஎல்ஏக்களை நியமித்திருந்தன.
இவர்களுடன் பிற பிரபலங்களான பொதுச்செயலாளர் ராமஸ்ரீநிவாசன், மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஆன்மிகப் பிரிவின் தலைவர் எம்.நாச்சியப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
















