Home செய்திகள் தேசிய செய்திகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்

தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, பிப்ரவரி 5- பல்​வேறு திட்​டங்​களின் கீழ் தமிழ்​நாட்​டுக்கு ஒதுக்கப்பட்​டுள்ள நிதி, அமல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​கள் என்னென்ன என்​பது தொடர்​பாக மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய அரசு சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள செய்திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: “மத்​திய அரசின் பல்​வேறு துறை​கள் மூலம் தமிழ்​நாடு மாநிலத்​துக்கு பல திட்​டங்​களுக்கு நிதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல திட்​டங்​களை அமல்​படுத்தி வரு​கிறது. 2026-27ம் நிதி​யாண்​டுக்​கான (பட்​ஜெட் மதிப்​பீடு​கள்) வரி பகிர்​மானத் தொகை​யாக 58,021 கோடி ரூபாய் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், மானிய உதவித்​தொகை 2025-26ம் நிதி​யாண்​டில் தமிழ்​நாட்​டுக்​கான பட்​ஜெட் ஒதுக்​கீடு 23,834 கோடி ரூபா​யாக உள்​ளது. 2014 முதல் 2026 வரை வரிப் ​பகிர்வு தொகை ரூ.4 லட்​சம் கோடியாக​வும், மானிய உதவி ரூ.2.55 லட்​சம் கோடி​யாக​வும் உள்ளது. மேலும் மூலதனச் செல​வினங்​களுக்​காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. பல்​வேறு ரயில் திட்​டங்​கள் உட்பட தமிழகத்​துக்கு பிரதம​ரால் அர்ப்​பணித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. மதுரை- போடி நாயக்​க​னூர் இடையே 90 கி.மீ தொலைவி​லான ரயில் ​பாதை மின்​மய​மாக்​கல், தெற்கு ரயில்வே பிரி​வில் முக்கியத்து​வம் வாய்ந்த இரட்டை வழிப்​பாதை (நாகர்​கோ​வில் டவுன் – கன்​னி​யாகுமரி மற்​றும் ஆரல்​வாய் மொழி – நாகர்கோவில்),
மண்டல ரயில் போக்​கு​வரத்து இணைப்​புத் திட்டங்களை ரயில்வே அமைச்​சகம் செயல்​படுத்​தி​யுள்​ளது. மேலும், பயணி​யர் / சரக்​குப் போக்​கு​வரத்து திறனை​யும் மேம்படுத்​தி​யுள்​ளது. தற்​போது ரூ.33,467 கோடி செல​வில் 22 ரயில்வே திட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மேலும், 8 வந்தே பாரத் ரயில் சேவை​கள் தமிழகத்​தில் செயல்​பாட்​டில் உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்​டாம் கட்​ட திட்​டத்​துக்​கான மொத்த செலவு ரூ.63,246 கோடி ரூபா​யில் 65 சதவீதம் மத்​திய அரசு நிதி​யுதவி அளிக்​கிறது. தமிழ்​நாட்​டில் கடந்த 2025ம் ஆண்டு முதல் 7,000 கி.மீ.க்​கும் அதி​க​மான தேசிய நெடுஞ்​சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரலில் ரூ.8,000 கோடி மதிப்​பிலான பல்வேறு சாலைத் திட்​டப்​பணி​களுக்கு பிரதமர் அடிக்​கல் நாட்டி வைத்​துள்​ளார். பாரத்​மாலா திட்​டத்​தின் கீழ் பெங்​களூரு – சென்னை விரைவுச்​சாலை, உள்ளிட்ட பசுமை வழிச்​சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் ரூ.450 கோடி ரூபாய் செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய விமான முனைய கட்​டடத்தை பிரதமர் கடந்த ஆண்டு திறந்து வைத்​தார்.