
சென்னை: பிப்ரவரி 5-
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 23ஆம் தேதி நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். தற்போது 2வது முறையாக தேர்தல் பரப்புரக்காக மோடி 2வது முறையாக தமிழகம் வரவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறார்.
இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இணையக் கூடும் என்பதால், இந்த அறிவிப்பை வெளியிடாமல் காத்திருக்கின்றனர். இதனிடையே ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். பிப்ரவரி 28ல் மதுரை வரும் மோடி எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன், திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரிவேந்தர் மட்டும் தாமதமாக வந்ததால், மேடையேறவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதற்கான பணிகளை பாஜக செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார். என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடக்கவிருந்தது. ஆனால் இடப் பிரச்சனை காரணமாக மதுராந்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டம் நடக்கவிருப்பதால், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிகளவில் ஆதரவாளர்களுடன் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

















