Home பக்தி கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்

கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்

கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.
மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்டின் சூழலை மாற்றாமல் பக்தர்கள் மலையில் பயணிக்க வேண்டியதும் மிகவும் அவசியம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பக்தர்களும்,
தென்னிந்தியா மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் மலை ஏறத் தொடங்கி உள்ளனர். ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு ரூ. 20 பக்தர்கள் செலுத்தி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்