இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் – 69 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பிப்ரவரி 7-
பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயி​ரிழந்​தனர்.
169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.
பாகிஸ்​தானின் மக்​கள் தொகை 25 கோடி ஆகும். இதில் சுமார் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்​லிம்​கள் ஆவர். சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்​லிம்​கள் ஆவர். இருதரப்​பினர் இடையே அவ்​வப்​போது மோதல்​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக ஷியா பிரிவு மசூ​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கிறது.
இந்த சூழலில் பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று பிற்​பகல் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இதில் 69 பேர் உடல் சிதறி உயி​ரிழந்​தனர். 169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். தலைநகர் இஸ்​லா​மா​பாத் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து இஸ்​லா​மா​பாத் போலீஸ் மூத்த அதி​காரி ஜாவத் கூறிய​தாவது:
இஸ்​லா​மா​பாத்​தில் தர்​லாய் கலான் பகு​தி​யில் உள்ள கஸ்ர்-இ-கஜீஜதுல் குப்ரா என்​றழைக்​கப்​படும் ஷியா மசூ​தி​யில் வெள்​ளிக்​கிழமை தொழுகை நடை​பெற்று கொண்​டிருந்​தது. அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த தற்கொலைப் படை தீவிரவாதி மசூதிக்குள் நுழைய முயன்றார்.
அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியபோது. அந்த தீவிரவாதி வெடித்துச் சிதறினார். இந்த தாக்குதலுக்கு இது​வரை எந்த அமைப்​பும் பொறுப்​பேற்​க​வில்​லை. இவ்​வாறு போலீஸ் அதி​காரி ஜாவத் தெரி​வித்​தார். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்​போது, “மசூ​தியை குறி​வைத்து கோழைத்தன​மான தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இந்த தாக்​குதலுக்கு காரண​மானவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள்” என்றார்.
இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானுக்​கும், ஆப்​கானிஸ்​தானுக்​கும் இடையே உள்ள பிரச்சினையில் இரு தரப்பும் தாக்கிக் கொள்கின்றனர்.
பாகிஸ்​தானின் தந்தை என்​றழைக்​கப்​படும் முகமது அலி ஜின்​னா, ஷியா முஸ்​லிம் பிரிவை சேர்ந்​தவர். அந்த நாட்டை கட்​டமைத்த பல்​வேறு தலை​வர்​கள் ஷியா முஸ்​லிம்​கள் ஆவர். ஆனால் கடந்த 1980-ம் ஆண்​டுக்​குப் பிறகு பாகிஸ்​தானில் ஷியா முஸ்​லிம்​களுக்கு எதி​ரான தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.இதன் பின்​னணி​யில் சன்னி கிளர்ச்​சிக்​ குழுக்​கள்​ உள்​ளன. இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.